காஷ்மீர் கிராமத்தில் 16 மர்ம மரணங்கள்; மத்திய குழு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-01-2025

காஷ்மீர் கிராமத்தில் 16 மர்ம மரணங்கள்; மத்திய குழு இன்று ஆய்வு

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரஜோரி மாவட்டத்தில் புதல் கிராமத்தில் மர்ம நோய் தாக்குதல் ஏற்பட்டு உள்ளது. இதனால், கடந்த 45 நாட்களில் 16 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். இது கிராமத்தினரிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீரில் 16 பேர் மர்ம நோய் பாதிப்புக்கு பலியான சம்பவம் பற்றி ஆய்வு செய்ய, மந்திரிகள் மட்டத்திலான குழு ஒன்றை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அமைத்து உள்ளார். அந்த குழுவினர் காஷ்மீருக்கு இன்று சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

Update: 2025-01-19 04:03 GMT

Linked news