காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு மரண... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-01-2025
காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை
கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்த ஷாரோன் ராஜ் என்ற வாலிபருக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில், அவரது காதலி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிக்கான தண்டனை விவரத்தை நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு கோர்ட்டு இன்று வெளியிட்டது. இரண்டாம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த கிரீஷ்மாவின் தாய் சிந்துவை வழக்கில் இருந்து விடுவித்து கோர்ட்டு உத்தரவிட்டது. கிரீஷ்மாவின் தாய்மாமன் நிர்மல் குமாருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
Update: 2025-01-20 06:13 GMT