இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-01-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த சட்டப்பேரவை தலைவர்கள் மாநாட்டில் இருந்து தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வெளிநடப்பு செய்தார். தமிழ்நாடு கவர்னர் குறித்து அப்பாவு பேசியது பதிவாகாது என மாநிலங்களவை துணைத்தலைவர் கூறியதால் வெளிநடப்பு செய்தாக கூறப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்கும் விழாவில் பிரதமர் மோடியின் சிறப்புத் தூதராக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள டிரம்பிற்கு போப் பிரான்சிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப்பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை முடியும் வரை தற்போதைய நிலையே தொடர வேண்டுமென்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து இருக்கிறது.
அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரப் பதவியேற்க உள்ள நிலையில் அமெரிக்க காபிடோல் ரோட்டுண்டா கட்டிடத்தின் வெளியே மக்கள் குவிய தொடங்கி உள்ளனர்.
எனக்கு திருப்தி இல்லை. கொல்கத்தா காவல்துறையே குற்றவாளிக்கு மரண தண்டனையை உறுதி செய்திருக்கும் என்று பெண் டாக்டர் கொலை தீர்ப்பு குறித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்க வேண்டும். ஐ.ஐ.டி இயக்குநரா, ஆர்.எஸ்.எஸ். பிரசாரகரா என வேறுபாடு தெரியாத அளவுக்கு அவரது செயல் உள்ளது. காய்ச்சல் போன்ற பல நோய்களுக்கு கோமியம் (மாட்டின் சிறுநீர்) அற்புதமான மருந்து என காமகோடி பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
கோமியத்தில் நோய் எதிர்ப்பு இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 5 ஆராய்ச்சி முடிவுகளும் ஒரு காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே பேசினேன் என்று சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி மீண்டும் கூறியுள்ளார். கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும் என்று காமகோடி ஏற்கனவே கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில், முன்னாள் மனைவியை கட்டிப்போட்டு ஆசிட் வீசிய சுனில் தீக்சித் என்ற நபர் கைது செய்யப்பட்டார். ஆசிட் வீசியதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.