தூத்துக்குடியில் ரூ.1156 கோடி முதலீட்டில் உற்பத்தி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025

தூத்துக்குடியில் ரூ.1156 கோடி முதலீட்டில் உற்பத்தி ஆலை அமைக்கும் ரிலையன்ஸ் குழுமம்

தூத்துக்குடியில் அல்லிகுளம் சிப்காட்டில் ரூ.1156 கோடி முதலீட்டில் ரிலையன்ஸ் குழுமம் நுகர்வோர் பொருட்கள் (FMCG) உற்பத்தி ஆலை அமைக்க உள்ளது. அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தின்பண்டங்கள், மசாலா, எண்ணெய் வகை உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி செய்யும் ஆலை 60 ஏக்கரில் அமைகிறது. இதன் மூலம் உள்ளூரைச் சேர்ந்த 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Update: 2025-09-24 05:43 GMT

Linked news