குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-08-2025
குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் செய்து, அந்நிகழ்வில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
ஆண்டுக்கு ரூ.600 கோடிக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது செலவல்ல, சூப்பரான சமூக முதலீடு. இக்குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்து எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பணியாற்றுவார்கள். இதுதான் இத்திட்டத்தின் உண்மையான வளர்ச்சி
இன்றைய நாள் என் மனதுக்கு நிறைவான நாள்.. மகிழ்ச்சிக்குரிய நாள். குழந்தைகளுடன் இணைந்து காலை உணவு சாப்பிட்டதால் குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது. இன்று நாள் முழுவதும் எனக்கு ஆக்டிவான நாளாக, மனநிறைவான, மகிழ்ச்சிக்குரிய நாளாக இருக்கப் போகிறது. 20 லட்சம் மாணவர்கள் காலை உணவு சாப்பிடுவதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருந்துவிடப் போகிறது?
இவ்வாறு அவர் கூறினார்.