இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-08-26 09:06 IST


Live Updates
2025-08-26 14:25 GMT

தமிழகத்திற்கு செப்டம்பர் மாதத்திற்கான 36.76 டி.எம்.சி நீரினை வழங்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு ஆணையின்படி கர்நாடகம் பில்லிகுண்டுலுவில் நீரினை வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 43வது கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

2025-08-26 13:14 GMT

கூடலூரில் 13 பசு மாடுகளை வேட்டையாடி போக்கு காட்டும் புலியை பிடிக்க 30 அடி நீளம் கொண்ட பிரமாண்ட கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிக்கப்பட்டு வருகிறது.

2025-08-26 12:15 GMT

கேரளாவின் கொல்லம் ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் வரை செல்லும் QLN-TBM எக்ஸ்பிரஸ்(16102) ரெயிலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செப்.1 ஆம் தேதி முதல் கொல்லம் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு புறப்பட்ட ரெயில் மாலை 4 மணிக்கு புறப்படும் என்றும், தாம்பரம் ரெயில் நிலையத்தை நள்ளிரவு 2.30 மணிக்கு அடைந்த ரெயில், காலை 7.30 வந்து அடையும் என தெற்கு ரெயில்வே அறித்துள்ளது.

2025-08-26 12:11 GMT

ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே நம்மிடம் புஷ்பக விமானம் இருந்தது. இன்று நம்மிடம் உள்ள ட்ரோன்கள், ஏவுகணைகளை பண்டைய காலத்திலயே வைத்திருந்தோம். இதை நாம் மகாபாரதத்தில் படித்திருக்கிறோம் என்று மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். 

2025-08-26 11:48 GMT

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தூத்துக்குடி மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ ரூ.2,000, பிச்சிப்பூ கிலோ ரூ.1,500, கனகாம்பரம் கிலோ ரூ.2,000க்கு விற்பனை ஆகிறது.

2025-08-26 11:46 GMT

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அந்நாட்டு நீதிமன்றம் பிணை வழங்கியது. கடந்த 22ம் தேதி அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய புகாரில் ரணில் கைது செய்யப்பட்டார்.

2025-08-26 11:29 GMT

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் அபராதத்துடன் விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம். கடந்த 9ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 6 மீனவர்களுக்கு இந்திய மதிப்பில் தலா ரூ.87,000. ஒருவருக்கு ரூ.14,500 அபராதம் விதித்தது இலங்கை நீதிமன்றம்.

2025-08-26 11:26 GMT

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித், அவரது தந்தை சரவணன், சகோதரர் ஜெயபாலன் ஆகிய மூவருக்கும் செப். 9ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்