தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் தமிழ்நாடு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் பதிவியில் இருந்து செந்தில்பாலாஜி, பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளனர். பொன்முடி வகித்த வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வத்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு பால்வளத்துறை வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகவில்லை. நாளை மாலை 6 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
Update: 2025-04-27 14:44 GMT