இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் பதிவியில் இருந்து செந்தில்பாலாஜி, பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளனர். பொன்முடி வகித்த வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வத்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு பால்வளத்துறை வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகவில்லை. நாளை மாலை 6 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
பும்ரா அபார பந்துவீச்சு... லக்னோவை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்
20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் பும்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். மும்பை தொடர்ச்சியாக பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் மும்பை அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியது.
"நல்லது நடக்கும் என்றால்.. எதையும் செய்ய தயங்க மாட்டோம்.." - மேடை அதிர பேசிய விஜய்
தனியார் கல்லூரியில் நடந்த இந்த தவெக பூத் கமிட்டி கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், "தவெக வெறும் ஓட்டுக்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் துவங்கப்பட்ட கட்சி கிடையாது. இங்கு சமரசம் எனும் பேச்சுக்கே இடமில்லை. அதேசமயம், மக்களுக்கு நல்லது நடக்கிறது என்றால், எந்த எல்லைக்கும் செல்ல நாங்கள் தயங்கமாட்டோம்” என்று விஜய் தெரிவித்தார்.
ஐ.பி.எல். 2025: டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணி முதலாவதாக பேட்டிங் செய்கிறது.
அடிமை ஆட்சியை எதிர்க்க இங்கே புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது - ஆதவ் அர்ஜுனா
தமிழக வெற்றிக் கழக பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “ஊழலாட்சியை, அடிமை ஆட்சியை எதிர்க்க இங்கே புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது. இது மக்களுடைய செல்வாக்கு. இந்த இளைஞர்களை வைத்து என்ன செய்யப் போகிறார்கள் என பேசுகிறார்கள்.
2026 தமிழக வெற்றிக் கழகத்திற்கான நாள்.. 2 நாட்களாக கோவை முடங்கிவிட்டது.. வரலாறு உருவாகும்போது பழைய காலத்தை பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள்" என்று கூறினார்.
தண்டவாளத்தில் கிடந்த கற்கள்: ரெயிலை கவிழ்க்க சதியா? - சென்னையில் பரபரப்பு
அம்பத்தூர் - பட்டரவாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் கற்கள் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேர் பலி
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே தளபதி சமுத்திரம் கீழூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று
சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரில் வந்த கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதன் விளைவாக கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
'போருக்குத் தயார்'.. அரபிக்கடலில் இந்திய கடற்படை செய்த சம்பவம்
இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலில் இருந்து ஏவுகணையை ஏவி எதிரி நாடுகளின் போர்க்கப்பல்களை அழிக்கும் வகையிலான சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது.
உரிமையை நிலைநாட்டும் திராவிட மாடல் அரசு: உதயநிதி ஸ்டாலின்
கோவை ஆர்.எஸ்.புரத்தில் ரூ.10 கோடி மதிப்பில் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைய உள்ள புதிய ஆக்கி மைதான கட்டுமானப் பணிக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். டர்ப் தளம், மின் கோபுர விளக்குகள், கழிவறை, பார்வையாளர் அரங்கம் உள்ளிட்டவை மைதானத்தில் அமைகின்றன.
சூர்யகுமார், ரிக்கல்டன் அரைசதம்... லக்னோ அணிக்கு 216 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை
மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக மயங்க் யாதவ் மற்றும் ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி லக்னோ அணி விளையாடி வருகிறது.