கனடா தேர்தல்; வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- லிபரல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 29-04-2025
கனடா தேர்தல்; வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- லிபரல் கட்சி முன்னிலை
343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் துவக்கம் முதலே லிபரல் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. முடிவுகள் தெரியவரத்தொடங்கிய 196 தொகுதிகளில் லிபரல் கட்சி 107 இடங்களிலும் கன்சர்வேட்டிவ் கட்சி 79 இடங்களிலும், இதர இடங்களில் பிற கட்சிகளும் முன்னிலை பெற்றுள்ளன.
Update: 2025-04-29 04:24 GMT