இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 29-04-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் அதிகமாக வெற்றி பெறுவோம் என கொளத்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு ஸ்டிக்கர் மூலம் ரியாக்ட் செய்யும் வசதி விரைவில் அமலுக்கு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அட்சய திருதியை முன்னிட்டு நெல்மணிகளில் நெக்லஸ் மற்றும் கம்மல்களை வடிவமைத்த் கோவையை சேர்ந்த பொற்கொல்லர் ராஜா.விவசாயம் பெருகட்டும், நாடு வளம் பெறட்டும் என்ற நோக்கத்தோடு இதை வடிவமைத்ததாக தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாமன்றக் கூட்டத்தில் பாஜக - காங்கிரஸார் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. மாற்றுத்திறனாளிகள் மையத்திற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் பெயர் சூட்ட காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இரு தரப்பினரும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அகில இந்திய வணிகர் அமைப்பு மே 1 முதல் பாகிஸ்தானுடனான வணிகத்தை நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2024ஆம் ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வரும் மே மாதத்தில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தவெக கொடியில் யானை சின்னத்துக்கு தடைகோரிய வழக்கின் விசாரணை ஜூன் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. யானை சின்னத்துக்கு தடை விதிக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கனடா நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஹரி ஆனந்தசங்கரி, யுவனிதா நாதன் ஆகியோர் கனடா நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். காலிஸ்தான் ஆதரவு கட்சியான புதிய ஜனநாயக கட்சி ஏழு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைவைக்கப்பட்டது .
3 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் - மதுரை தனியார் பள்ளிக்கு சீல்வைக்கப்பட்டது. காவல் துணை ஆணையர் அனிதா, வருவாய் கோட்டாச்சியர் ஷாலினி உள்ளிட்டோர் சீல் வைத்தனர்.