பீகாரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் என... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025
பீகாரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் என தகவல் - போலீஸ் எச்சரிக்கை
பீகாரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளம் வழியாக பீகாருக்குள் பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 3 பேர் ஊடுருவி இருப்பதாக அம்மாநில போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அவர்களது புகைப்படங்களை வெளியிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ராகுல் காந்தி பயண திட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Update: 2025-08-29 05:42 GMT