இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-08-29 09:14 IST


Live Updates
2025-08-29 13:44 GMT

தாம்பரம் பெருங்களத்தூர் ரயில்வே பாலம் அருகே வாகன சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல். 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

2025-08-29 13:10 GMT

ரஜினி, கமல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கே.எஸ் ரவிக்குமார்...

ரஜினியின் ''படையப்பா'' திரைப்படம் வெளியாகி 27 வருடங்கள் கடந்த நிலையில் விரைவில் ரீ-ரிலீசுக்கு தயாராக உள்ளதாக நிகழ்ச்சி ஒன்றில் அசலத்தான தகவலை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

2025-08-29 12:47 GMT

தெலுங்கு படத்தில் கதாநாயகியாக தென் கொரிய நடிகை...

இது ஒரு பெண்ணை மையமாக கொண்ட கதை. இதில் கதாநாயகியாக நடிப்பது ஒரு தெலுங்கு நடிகை அல்ல, தென் கொரிய நடிகை. அவர்தான் ஜுன் ஹியூன் ஜி. இவர் ''மை சாஸி கேர்ள்'' (2001) ''மை லவ் ப்ரம் தி ஸ்டார்'' போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். 

2025-08-29 12:30 GMT

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88.29 என்ற அளவிற்கு சரிந்துள்ளது. இந்த வீழ்ச்சி என்பது இதுவரை இல்லாத அளவாகும். இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக ரூபாய் மதிப்பு சரிந்து வருவதாக கூறப்படுகிறது.

2025-08-29 12:30 GMT

50 சதவீத வரி விவகாரம்: திருப்பூரில் மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க அரசின் 50 சதவீத வரிவிதிப்பால் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ள திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களைக் கண்டுகொள்ளாமல் கைவிட்ட பாஜக அரசுக்கு எதிராக மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மத சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

2025-08-29 12:04 GMT

 மத்திய பாஜக அரசு தமிழக மாணவர்களுக்கு வழங்கும் கல்வித் தொகையை வழங்காததை கண்டித்து திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இன்று  திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

2025-08-29 11:52 GMT

சோசியல் மீடியாவில் இருந்து விலகிய பிரபல நடிகை...- ரசிகர்கள் அதிர்ச்சி

சோசியல் மீடியாவில் இருந்து சின்ன பிரேக் எடுத்துக் கொள்வதாக நடிகை கெட்டிகா ஷர்மா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2025-08-29 11:36 GMT

வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் செப்.3ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு; இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து செப்.5ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

இதேபோல் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் செப்.10ம் தேதி மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிக்கும் வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு

2025-08-29 11:07 GMT

தமிழில் அறிமுகமாகும் கன்னட நடிகை ரீஷ்மா...ஹீரோ யார் தெரியுமா?

''பேபி அண்ட் பேபி'' படத்தில் கடைசியாக நடித்த ஜெய், வினய் கிருஷ்ணா இயக்கும் வொர்க்கரில் கன்னட நடிகை ரீஷ்மாவுடன் கைகோர்த்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்