பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 29-10-2025

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா:  காவல்துறை அறிவிப்பு

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு, வரும் 31-ந்தேதி மதுரையில் இருந்து ராமநாதபுரம் வரும் அனைத்து அரசு, தனியார் பஸ்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் பூவந்தி, சிவகங்கை, காளையார்கோவில், சருகனி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டினம் வழியாக இயக்கப்படும்.

பார்த்திபனூர், கமுதி, முதுகுளத்தூர் மற்றும் சாயல்குடி பகுதிகளுக்குள் அரசு, தனியார் பஸ்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் வர அனுமதி கிடையாது என மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Update: 2025-10-29 11:06 GMT

Linked news