சென்னை மாநகருக்குள் கட்டுமானப் பணிகளுக்கான... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025
சென்னை மாநகருக்குள் கட்டுமானப் பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சென்னை மாநகருக்குள் கட்டுமானப் பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
20 ஆயிரம் சதுர மீட்டர் வரையான தளங்களில் விதிமீறலுக்கு ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், 500 சதுர மீட்டர் பரப்பளவு வரையான கட்டிடங்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், நடுத்தர, குறைந்த மதிப்பு கொண்ட கட்டிடங்களை விதிமீறல்களை சரிசெய்ய 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Update: 2025-04-30 06:31 GMT