இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-04-30 09:24 IST


Live Updates
2025-04-30 14:25 GMT

சாதிவாரி கணக்கெடுப்பில் பல முக்கிய கேள்விகளுக்கு விடையில்லை. 50 சதவீதம் உச்ச வரம்பை நீக்க வேண்டும். வெளிப்படையாக கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்புக்கு கால வரம்பு நிர்ணயம் செய்ய மத்திய அரசுக்கு ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். 

2025-04-30 14:00 GMT

சென்னை லயோலா கல்லூரியில் மறைந்த போப் பிரான்சிஸ் அவர்களின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில், அவரது உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

2025-04-30 13:59 GMT

தமிழ்நாட்டின் 7 இடங்களில் வெயில் இன்று சதம் அடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 104 °F வெப்பநிலை பதிவுவாகி உள்ளது. கரூர் பரமத்தியில் 104 °F. ஈரோட்டில் 103.28 °F. சேலத்தில் 102.2 °F, திருத்தணியில் 101.12 °F. தருமபுரியில் 100,76 "F, மதுரை விமான நிலையத்தில் 100.4 °F. மீனம்பாக்கம் மற்றும் திருச்சியில் 99.86 °F அளவுக்கு வெயில் பதிவாகி உள்ளது.

2025-04-30 13:58 GMT

சாதிவாரி கணக்கெடுப்பை எப்போது நடத்துவீர்கள்? எப்போது முடிப்பீர்கள்? சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் முக்கிய கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

2025-04-30 13:13 GMT

பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் அஜித்குமாரின் மகன் ஆத்விக்-ஐ வாழ்த்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு புகைப்படத்தைப் பகிர்ந்து ‘நெகிழ்ச்சியன தருணம்’ என ஷாலினி அஜித்குமார் நெகிழ்ச்சிபட கூறியுள்ளார்.

2025-04-30 13:10 GMT

நாமக்கல்: முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 10 காசுகள் உயர்ந்தது. கோடை வெயில் தாக்கத்தால் உற்பத்தி குறைந்த நிலையில், கடந்த 5 நாட்களில் 45 காசுகள் உயர்ந்துள்ளது.

2025-04-30 12:45 GMT

மகளிர் உரிமைத் தொகைக்கு ஜூன் 4ஆம் தேதி 'மக்களுடன் முதல்வர்' முகாமில் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.

2025-04-30 12:44 GMT

நடிகர் அஜித்குமாருடன் சிஎஸ்கே மேட்ச் பார்த்தது மகிழ்ச்சியான அனுபவம். நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷண் விருது வழங்கியிருப்பது சந்தோஷம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

2025-04-30 11:55 GMT

கரும்புக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.355ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

2025-04-30 11:11 GMT

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்