ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: பிரதமர் மோடி - சீன... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு
7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.
வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்த இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் இன்றும், நாளையும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு கல்வான் பகுதியில் இந்தியா-சீனா இடையேயான தாக்குதலுக்கு பின் முதல்முறையாக சீன அதிபரை பிரதமர் மோடி சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-08-31 05:08 GMT