பீகாரில் எஸ்.ஐ.ஆர்.தான் முன்னிலையில் இருக்கிறது..... ... பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக
பீகாரில் எஸ்.ஐ.ஆர்.தான் முன்னிலையில் இருக்கிறது.. பா.ஜ.க. அல்ல: காங்கிரஸ் தலைவர் கடும் தாக்கு
பீகாரில் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது. ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இதனால் அக்கூட்டணி கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்நிலையில், பீகாரில் எஸ்.ஐ.ஆர்.தான் முன்னிலையில் இருக்கிறது என்றும் பாஜ.க.-ஜே.டி.யு. அல்ல என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உதித் ராஜ் கூறி உள்ளார். மேலும், பீகாரில் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்திருப்பதற்கு தேர்தல் ஆணையமும், அது நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியும்தான் காரணம் என்றும் குற்றம்சாட்டி உள்ளார்.
வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகள் குறித்து ஏராளமான ஆட்சேபனைகள் பதிவு செய்யப்பட்டபோதும் அவை நிராகரிக்கப்பட்டுள்ளன என்றும், இது ஜனநாயக படுகொலை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்.) நடைபெற்ற பிறகு நடைபெற்ற முதல் சட்டசபை தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.