பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக

பீகார் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.;

Update:2025-11-14 08:01 IST


Live Updates
2025-11-14 16:17 GMT

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: தற்போதைய நிலவரம்:-

தேசிய ஜனநாயக கூட்டணி - 202 ( பா.ஜ.க. - 89 , ஜே.டி.யு. - 85 , எல்.ஜே.பி. - 19, ஆர்.எல்.எம். - 4 , மற்றவை - 5)

இந்தியா கூட்டணி - 35 (ஆர்.ஜே.டி. - 25 , காங்கிரஸ் - 6 , இடது சாரிகள் - 3)

பகுஜன் சமாஜ் கட்சி - 1

ஜன் சுராஜ் -0

மற்றவை - 1

பீகாரில் அமோக வெற்றியுடன் ஆட்சியை தக்கவைத்தது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி. பீகார் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 243 தொகுதிகளில் 226 இடங்களுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன. தற்போதைய நிலவரப்படி பாஜக 6, ஜேடியு 10, ஆர்.ஜே.டி 2, லோக்ஜனசக்தி 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.

2025-11-14 15:31 GMT

பீகார் தேர்தல்; அலிநகர் தொகுதியில் 25 வயதே ஆன பாஜக வேட்பாளர் மைதிலி தாகூர் (84,915) 11,730 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மைதிலியை எதிர்த்து போட்டியிட்ட ஆர்.ஜே.டி வேட்பாளர் பினோஜ் மிஸ்ரா 73,185 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

2025-11-14 15:07 GMT

பீகார் சட்டமன்ற தேர்தலில் வெறும் 27 வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய ஜனதாதள வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். சந்தேஷ் தொகுதியில் போட்டியிட்ட ராதா சரண் 80,598 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

2025-11-14 14:30 GMT

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: தற்போதைய நிலவரம்:-

தேசிய ஜனநாயக கூட்டணி - 207 ( பா.ஜ.க. - 95 , ஜே.டி.யு. - 84 , எல்.ஜே.பி. - 19, ஆர்.எல்.எம். - 4 , மற்றவை - 5)

இந்தியா கூட்டணி - 35 (ஆர்.ஜே.டி. - 25 , காங்கிரஸ் - 6 , இடது சாரிகள் - 3)

பகுஜன் சமாஜ் கட்சி - 1

ஜன் சுராஜ் -0

மற்றவை - 6

2025-11-14 14:26 GMT

வெறும் 10,000க்கு விலைபோன தேர்தல். பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்ட 238 தொகுதிகளிலும் பின்னடவை சந்தித்துள்ள நிலையில் பிரஷாந்த் கிஷோர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2025-11-14 14:16 GMT

பீகாரில் இனி ஆர்.ஜே.டி அரசு திரும்ப வரப்போதில்லை - பிரதமர் மோடி

தேர்தல் ஆணையம் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. அமைதியான தேர்தலை நடத்திய ஆணையம், அதன் ஊழியர்கள், பாதுகாப்பு படையினருக்கு பாராட்டுகள். நக்சலைட்டு பாதிப்பு அதிகமிருந்த பகுதிகளில் அச்சமின்றி மக்கள் வாக்களிக்க ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. நாட்டு துப்பாக்கி ஆட்சி இனி பீகாரில் வரக்கூடாது என்று மக்கள் வாக்களித்துள்ளனர். மாபெரும் வரலாற்று தீர்ப்பை அளித்துள்ள பீகார். மக்கள் நலனுக்கு என்.டி.ஏ கூட்டணி பாடுபடும் 

என்று பிரதமர் மோடி கூறினார்.

2025-11-14 13:45 GMT

பீகார் தேர்தலில் ரகோபூர் தொகுதியில் ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் வெற்றி பெற்றார். தேஜஸ்வி யாதவ் 32 சுற்றுகளின் முடிவில் 1,18,597 வாக்குகள் பெற்று 14,532 வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேஜஸ்வியை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சதீஷ்குமார் 1,04,065 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

2025-11-14 13:34 GMT

பாஜக அலுவலகம் வந்த பிரதமர் மோடிக்கு மலர்களை தூவி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் பாஜக அலுவலகம் வந்தார் பிரதமர் மோடி. பீகார் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் கட்சியினர் மத்தியில் பிரதமர் பேசுகிறார். பீகார் தேர்தல் வெற்றியை அடுத்து பாஜக தலைமை அலுவலகத்தில் இனிப்புகளை வழங்கி கட்சியினர் கொண்டாடினர்.

2025-11-14 12:57 GMT

மாநிலத்தின் அனைத்து வாக்காளர்களுக்குன் நான் தலைவணங்குகிறேன். பீகார் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. பீகார் மேலும் முன்னேறி, நாட்டின் மிகவும் வளர்ந்த மாநிலங்கள் பட்டியலில் சேரும். பிரதமர் மோடி அளித்த ஆதரவுக்கு தலைவணங்குகிறேன் என நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

2025-11-14 12:17 GMT

பீகார் தேர்தல்: நல்லாட்சி, சமூக நீதி வென்றுள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்

பீகார் தேர்தல் வெற்றி தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

நல்லாட்சி வென்றுள்ளது. வளர்ச்சி வென்றுள்ளது. மக்கள் ஆதரவு மனநிலை வென்றுள்ளது. சமூக நீதி வென்றுள்ளது. 2025 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரலாற்று சிறப்புமிக்க மற்றும் இணையற்ற வெற்றியை அளித்ததற்காக பீகாரின் ஒவ்வொருவருக்கும் நன்றி. இந்த வெற்றி, பீகார் மக்களுக்கு சேவை செய்வதற்கும் பீகாருக்காக உழைப்பதற்கும் எங்களுக்குப் புதிய பலத்தை அளிக்கிறது.

வரும் காலங்களில், பீகாரின் முன்னேற்றம், பீகாரின் உள்கட்டமைப்பு மற்றும் பீகாரின் கலாச்சாரத்திற்காக நாங்கள் இன்னும் அதிகமாகச் செய்வோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநிலத்திற்கு முழுமையான வளர்ச்சியை வழங்கியுள்ளது. எங்கள் சாதனைப் பதிவு மற்றும் மாநிலத்தை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்வதற்கான எங்கள் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர். இந்த இணையற்ற வெற்றிக்கு முதல் மந்திரி நிதீஷ் குமார், மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை சேர்ந்த எங்கள் கூட்டாளிகளான சிராக் பாஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி மற்றும் உபேந்திர குஷ்வாஹா ஆகியோரை நான் வாழ்த்துகிறேன்.”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்