டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவுடன் நடிகர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-09-2025
டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவுடன் நடிகர் சரத்குமார் சந்திப்பு
டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவுடன் நடிகர் மற்றும் பா.ஜ.க. நிர்வாகியான சரத்குமார் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சரத்குமாருக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என பா.ஜ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், அவருக்கு இதுவரை பொறுப்பு வழங்கப்படவில்லை.
இந்த சூழலில் மத்திய மந்திரி அமித்ஷாவை டெல்லியில் தனது ஆதரவாளருடன் சென்று சரத்குமார் சந்தித்து பேசியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. சட்டசபை தேர்தலில் போட்டியிட சரத்குமார் திட்டமிட்டு உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
Update: 2025-09-06 05:42 GMT