நயினார் நாகேந்திரன் கூட்டணியை சரியாக கையாளவில்லை -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-09-2025

நயினார் நாகேந்திரன் கூட்டணியை சரியாக கையாளவில்லை - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுக ஒன்றிணைய செங்கோட்டையன் எடுக்கும் முயற்சிக்கு வாழ்த்துகள். கெடுவுக்கு பின் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். எடப்பாடி பழனிசாமி மாறுவார் அல்லது திருத்தப்படுவார் என 4 மாதங்கள் காத்திருந்தோம். ஆனால் அவர் மாறுவதாக தெரியவில்லை.

சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறும் கூட்டணியில் அமமுக இருக்கும். தேர்தலில் எங்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. தேர்தல் கூட்டணி குறித்து நாங்கள் முடிவெடுப்போம். அரசியலில் எதுவும் நடக்கும். புதிய கூட்டணி உருவாகும்." என கூறினார்.

Update: 2025-09-06 06:56 GMT

Linked news