‘உக்ரைன் வணிகவளாக தாக்குதல் பயங்கரவாத செயல் அல்ல’... ... #லைவ் அப்டேட்ஸ்:ரஷியா உக்ரைன் மீது நடத்திய போரால் ஏற்பட்ட சேதத்திலிருந்து மீள ஆண்டுகள் பல ஆகும்-அமெரிக்கா
‘உக்ரைன் வணிகவளாக தாக்குதல் பயங்கரவாத செயல் அல்ல’ - ரஷிய அதிபர் புதின்
உக்ரைனில் உள்ள கிரெமென்சுக் வணிகவளாகம் மீதான தாக்குதலில் பயங்கரவாதச் செயல் எதுவும் இல்லை என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளதாக, அந்நாட்டு அரசுக்குச் சொந்தமான ரியா நோவோஸ்டி செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்தது.
மேலும் இதுதொடர்பாக பேசிய அவர், “யாரும் இருப்பிடங்கள் மீது தாக்குதல் நடத்துவதில்லை. ரஷிய இராணுவம் எந்தவொரு சிவிலியன் பொருட்களையும் தாக்குவதில்லை. இதற்கு அவசியமே இல்லை. எங்களிடம் என்ன இருக்கிறது என்பதை தீர்மானிக்க அனைத்து சாத்தியங்களும் உள்ளன, மேலும் நவீன உயர் துல்லியமான நீண்ட தூர ஆயுதங்கள் மூலம் இந்த இலக்குகளை நாங்கள் அடைகிறோம்” என்று விளாடிமிர் புதின் கூறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2022-06-30 00:30 GMT