#லைவ் அப்டேட்ஸ்:ரஷியா உக்ரைன் மீது நடத்திய போரால் ஏற்பட்ட சேதத்திலிருந்து மீள ஆண்டுகள் பல ஆகும்-அமெரிக்கா

உக்ரைனில் உள்ள கிரெமென்சுக் வணிகவளாக தாக்குதல் பயங்கரவாத செயல் அல்ல என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.;

Update:2022-06-30 03:32 IST

zelenskiy_official/Instagram/Reuters


Live Updates
2022-06-30 07:15 GMT

அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனர் அவ்ரில் ஹைன்ஸ் ரஷியா உக்ரைன் மீது நடத்திய போரால் ஏற்பட்ட சேதத்திலிருந்து ரஷிய ராணுவம் மீள ஆண்டுகள் பல ஆகும் என கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறும் போது ரஷியா தரைப்படைகள் இப்போது மிகவும் மோசமாகிவிட்டன, அதனை மீட்க பல ஆண்டுகள் ஆகும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதனால் ஆற்றலைக் கட்டுப்படுத்த முயற்சியாகவும் தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்தவும் சைபர் தாக்குதல்கள், அணு ஆயுதங்கள் போன்றவற்ற ரஷியா பயன்படுத்தக்கூடும் என கூறினார்.

2022-06-30 00:30 GMT


‘உக்ரைன் வணிகவளாக தாக்குதல் பயங்கரவாத செயல் அல்ல’ - ரஷிய அதிபர் புதின்

உக்ரைனில் உள்ள கிரெமென்சுக் வணிகவளாகம் மீதான தாக்குதலில் பயங்கரவாதச் செயல் எதுவும் இல்லை என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளதாக, அந்நாட்டு அரசுக்குச் சொந்தமான ரியா நோவோஸ்டி செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்தது.

மேலும் இதுதொடர்பாக பேசிய அவர், “யாரும் இருப்பிடங்கள் மீது தாக்குதல் நடத்துவதில்லை. ரஷிய இராணுவம் எந்தவொரு சிவிலியன் பொருட்களையும் தாக்குவதில்லை. இதற்கு அவசியமே இல்லை. எங்களிடம் என்ன இருக்கிறது என்பதை தீர்மானிக்க அனைத்து சாத்தியங்களும் உள்ளன, மேலும் நவீன உயர் துல்லியமான நீண்ட தூர ஆயுதங்கள் மூலம் இந்த இலக்குகளை நாங்கள் அடைகிறோம்” என்று விளாடிமிர் புதின் கூறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-06-29 23:45 GMT

அமெரிக்காவிடமிருந்து 1.3 பில்லியன் டாலர் மானியத்தை உக்ரைன் பெறுகிறது.

இந்த மானியம் 7.5 பில்லியன் டாலர் பட்ஜெட் நிதி தொகுப்பின் ஒரு பகுதியாகும் என்று உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் நேற்று தெரிவித்தார்.

2022-06-29 23:27 GMT

தன்னலக்குழுக்களின் பதிவேட்டை அறிமுகப்படுத்த ஜெலென்ஸ்கி கையெழுத்திட்டார்.

அரசியல் கட்சிகள், அரசியல் விளம்பரங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்களுக்கு நிதியுதவி செய்வதிலிருந்து தன்னலக்குழுக்களுக்கு இது தடை விதிக்கிறது மற்றும் அரசு சொத்துக்களை தனியார்மயமாக்குவதில் இருந்து அவர்களை விலக்குகிறது.

2021 ஆம் ஆண்டில் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கையெழுத்திட்ட தன்னலக்குழு எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை இந்த ஆணையின் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தச் சட்டம் தன்னலக்குழுவின் சட்ட வரையறையை அறிமுகப்படுத்துகிறது, மேலும் தன்னலக்குழுக்களுடன் தொடர்புகளை அதிகாரிகள் அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-06-29 22:32 GMT


பொருளாதாரத் தடைகளில் இருந்து ரஷியாவை விலக்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஷியாவைத் தவிர்த்து கலினின்கிராட் ஒப்லாஸ்ட்டை பொருளாதாரத் தடைகளில் இருந்து விலக்குவது குறித்து ஜெர்மனியின் ஆதரவுடன் ஐரோப்பிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

2022-06-29 22:17 GMT


ஜூன் 17 ஆம் தேதி முதல் இருந்து வரும் பொருளாதாரத் தடைகள் காரணமாக, ரஷியாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து கலினின்கிராட் ஒப்லாஸ்ட்டுக்கு சரக்குகளை கொண்டு செல்வதை லிதுவேனியா பகுதியளவில் தடை செய்துள்ளது.

2022-06-29 22:02 GMT


உக்ரைன் மீதான போரில் ரஷியா நடத்துகிற தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலியாவது தொடர்கதை ஆகி வருகிறது. கடந்த 27-ந் தேதியன்று, கிரெமென்சுக் நகரில் வணிக வளாகம் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் அப்பாவி மக்கள் 18 பேர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக உக்ரைன் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று முன்தினம் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூடி அவசர ஆலோசனை நடத்தியது. அந்த கூட்டத்தில் இந்தியாவின் துணை நிரந்தர பிரதிநிதி ஆர்.ரவீந்திரா பேசினார். அவர், “உக்ரைன் மோதல்கள் நிறைய உயிரிழப்புகளையும், மக்களுக்கு குறிப்பாக பெண்கள், குழந்தைகள், வயதானோருக்கு சொல்ல முடியாத துயரங்களையும் ஏற்படுத்தி வருகிறது. பல லட்சம் பேர் வீடுகளை இழந்தனர், அண்டை நாடுகளுக்கு இடம் பெயரும் வலுக்கட்டாய நிலை உருவானது. இந்த மோதலில் நகர்ப்புற மக்கள் எளிய இலக்கு ஆகிறார்கள். உக்ரைன் நிலைமை, இந்தியாவுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தி வருகிறது” என கூறினார். உக்ரைன் போர் ஐரோப்பாவுடன் முடிந்துவிடவில்லை, அது உணவு, உரம், எரிபொருள் பாதுகாப்பு போன்றவற்றில் பெரும் கவலையை வளரும் நாடுகளில் ஏற்படுத்தி உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்