அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 3 ஆம் சுற்று தொடங்கியது
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 2-ம் சுற்று நிறைவடைந்து 3-வது சுற்று தொடங்கியுள்ளது. 3ஆம் சுற்றில் வீரர்கள் ஆரஞ்சு நிற உடை அணிந்து களம் கண்டுள்ளனர். முதல் மற்றும் இரண்டாவது சுற்று முடிவில் இதுவரை 172 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.
தேனி சீலையாப்பட்டி பகுதியை சேர்ந்த மாடுபிடி வீரர் முத்து கிருஷ்ணன் 7 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார். அவனியாபுரம் பகுதியை சேர்ந்த வீரர் கார்த்தி, ரஞ்சித் தலா 6 காளைகளை அடக்கி 2-வது இடத்தில் உள்ளனர்.
Update: 2024-01-15 03:50 GMT