மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் முதலிடம் பிடித்து காரை பரிசாக வென்றார்.

Update: 2024-01-15 01:49 GMT

ஜல்லிக்கட்டு

பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகை நாளான இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி  நடைபெற்று வருகிறது.  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார். போட்டியில் பங்கேற்க மொத்தம் 1,000 காளைகள், 800 மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. 

போட்டியில் காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக டாக்டர்கள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 

Full View
Live Updates
2024-01-15 12:17 GMT

10 சுற்றுகளாக நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவுபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய போட்டியில் மொத்தம் 825 காளைகள் களம்கண்ட நிலையில் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

அவனியாபுரம் கல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை அடக்கி கார்த்தி என்ற வீரர் முதலிடம் பிடித்தார். முதலிடம் பிடித்த கார்த்திக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. அதே போல அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்களை தெறிக்கவிட்டு முதலிடத்தை பிடித்த ஜி.ஆர்.கார்த்திக் என்பவரின் காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

2024-01-15 12:09 GMT

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது

களம் இறங்கிய காளைகள் - 817 🐂

🥇 - கார்த்திக் (17காளைகள்) 🚗

🥈 - மாரியப்பன் ரஞ்சித் (13காளைளகள் )

🥉- முரளிதரன், முத்துகிருஷ்ணன்(9காளைகள்)

2024-01-15 11:15 GMT

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியின் இறுதிச்சுற்று விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், கார்த்திக் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப்போட்டியில் வீரர் கார்த்தி 2-ம் இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அவனியாபுரத்தைச்சேர்ந்த மாடுபிடி வீரர் ரஞ்சித் 14 காளைகளை அடக்கி 2-வது இடத்தில் உள்ளார். சிவகங்கை மாடுபிடி வீரர் முரளிதரன் 9 காளைகளை அடக்கி 3-ம் இடத்தை பிடித்துள்ளார். தேனி சீலையம்பட்டி பகுதியைச்சேர்ந்த மாடுபிடி வீரர் முத்துகிருஷ்ணன் 7 காளைகளை அடக்கி 4-ம் இடம் பிடித்துள்ளார்.

2024-01-15 10:55 GMT

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 854 காளையருக்கு மருத்துவ பரிசோதனை செய்தில் 825 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க வந்த காளைகளில் 29 காளைகள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டன.

2024-01-15 10:44 GMT

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 10-வது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிச்சுற்றுக்கு 31 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் 10-வது சுற்றுக்கு 31 பேர் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

2024-01-15 10:43 GMT

9 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் 10-வது சுற்றில் காளைகள், காளையர் களமிறங்கி உள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 9-ம் சுற்று முடிவில் 721 வீரர்கள் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 10-ம் சுற்றில் மஞ்சள் நிற உடை அணிந்து 31 வீரர்கள் களம் கண்டுள்ளனர்.

2024-01-15 10:08 GMT

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 8-ம் சுற்று நிறைவடைந்து 9-வது சுற்று நடைபெற்று வருகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 9-ம் சுற்றில் ஊதா நிற உடை அணிந்து 25 வீரர்கள் களம் கண்டுள்ளனர்.

2024-01-15 09:53 GMT

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் போலி டோக்கன் மூலம் கொண்டு வரப்பட்ட 21 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.

2024-01-15 09:52 GMT

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 8-ம் சுற்று முடிவில் 656 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

2024-01-15 09:46 GMT

தமிழர்களின் உபசரிப்பு வியப்பூட்டுகிறது - அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கண்டுரசித்த வெளிநாட்டினர் புகழாரம் 

Tags:    

மேலும் செய்திகள்