10 சுற்றுகளாக நடைபெற்ற மதுரை அவனியாபுரம்... ... மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

10 சுற்றுகளாக நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவுபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய போட்டியில் மொத்தம் 825 காளைகள் களம்கண்ட நிலையில் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

அவனியாபுரம் கல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை அடக்கி கார்த்தி என்ற வீரர் முதலிடம் பிடித்தார். முதலிடம் பிடித்த கார்த்திக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. அதே போல அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்களை தெறிக்கவிட்டு முதலிடத்தை பிடித்த ஜி.ஆர்.கார்த்திக் என்பவரின் காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

Update: 2024-01-15 12:17 GMT

Linked news