“ஆபரேஷன் சிந்தூர்” - பிரதமர் மோடிக்கு நன்றி -... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்

“ஆபரேஷன் சிந்தூர்” - பிரதமர் மோடிக்கு நன்றி - பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவரின் மனைவி

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட சுபம் திவேதியின் மனைவி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) ராணுவத் தாக்குதல்களை நடத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “என் கணவரின் மரணத்திற்கு பழிவாங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது முழு குடும்பமும் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். மேலும் அவர் (பாகிஸ்தானுக்கு) பதிலளித்த விதம், அவர் எங்கள் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். இது என் கணவருக்கு ஒரு உண்மையான அஞ்சலி. என் கணவர் எங்கிருந்தாலும், இன்று அவர் நிம்மதியாக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

Update: 2025-05-07 01:56 GMT

Linked news