பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. .;
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது.
மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது
இந்த தாக்குதலை தொடர்ந்து நீதி நிலைநாட்டப்பட்டது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "#பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல், நீதி நிலைநாட்டப்பட்டது. ஜெய் ஹிந்த். ஆபரேஷன் சிந்தூர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ரெட்ரோ' திரைப்படத்தின் லாபத்தில் இருந்து அகரம் அறக்கட்டளைக்கு ரூ.10 கோடி வழங்கினார் நடிகர் சூர்யா.
உளுந்தூர்பேட்டை அருகே நடந்த விபத்து தொடர்பாக மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர் செல்வக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2ஆம் தேதி விபத்து நடந்த நிலையில், தன்னை கொல்ல முயற்சி என மதுரை ஆதீனம் குற்றம்சாட்டி இருந்தார். காரை அஜாக்கிரதையாக இயக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் செல்வக்குமார் மீது உளுந்தூர்பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலம் ஒரு வருட காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவடைய இருந்தது.
நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட டெல்லியில் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. போர் சூழல் ஒத்திகையின் ஒரு பகுதியாக டெல்லியில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. மின் விளக்குகளை அனைத்து டெல்லியின் பல பகுதிகளில் போர் சூழல் ஒத்திகை நடைபெறுகிறது.
மத்திய அரசின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு இசையமைப்பாளர் இளையராஜா பாராட்டு தெரிவித்துள்ளார். மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என எக்ஸ் தளத்தில் இளையராஜா பதிவிட்டுள்ளார்.
நிலைமையை இந்தியா மோசமாக்கினால் இந்தியா - பாகிஸ்தான் போர் ஏற்பட்டால் அது அணு ஆயுதப்போராக மாறலாம். அணு ஆயுதப்போராக மாறினால் அதற்கு இந்தியாவே பொறுப்பு என்று பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.
இந்தியாவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறியுள்ளார். ராணுவம் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.
திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி, காந்திகிராமம் மேம்பாலம் அருகே இருசக்கர வாகனம் மீது சிறிய வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சின்னாளப்பட்டி கலைமகள் காலனி பகுதியை சேர்ந்த அண்ணன் சீனிவாசன், தம்பி பழனிச்சாமி 2 பேர் பலி என தகவல் வெளியாகி உள்ளது. மேற்படி சம்பவ இடத்தில் அம்பாத்துரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐஐடி விரிவாக்கம் மாணவர் திறனை 6,500 க்கும் மேற்பட்ட இடங்களால் அதிகரிக்கும் ரூ.11,828 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதிமுக தான் உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றியது. 20.02.2016 அன்று சட்டமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றி அரசிதழில் வெளியிட்டோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் கூறியுள்ளார்.