பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் கோட்லி,... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்

கோட்லி, முசாபர்பாத், பாவல்பூர் ஆகிய 5 இடங்களில் பயங்கரவாதிகளை குறிவைத்து இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இதனைத்தொடந்து இந்தியாவின் ராணுவ தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. 

இதனிடையே பாகிஸ்தான் ராணுவ தளங்களை குறிவைத்து எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Update: 2025-05-07 02:59 GMT

Linked news