25 நிமிடங்கள் நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ - கர்னல்... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்

25 நிமிடங்கள் நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ - கர்னல் சோபியா குரேஷி

வெறும் 25 நிமிடங்களில், பாகிஸ்தானின் பல பெரிய பயங்கரவாத தளங்கள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை அழித்து, பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.

ஆபரேஷன் சிந்தூர் நேற்று நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை மேற்கொள்ளப்பட்டது. இதில் 9 தீவிரவாத முகாம்கள் குறி வைத்து தாக்கப்பட்டன. நம்பகமான உளவுத்துறை தகவல்கள் அடிப்படையிலேயே இந்த முகாம்கள் கண்டறியப்பட்டது.

மேற்கண்ட தகவல்களை கர்னல் சோபியா குரேஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பயங்கரவாத முகாம்களின் வரைபடம்

இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பயங்கரவாத முகாம்கள் செயல்படும் இடங்களின் வரைபடத்தை அவர் வெளியிட்டார்.  

Update: 2025-05-07 06:10 GMT

Linked news