ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி: பிரதமர் மோடியின்... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்

ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி: பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் ரத்து

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 21 பயங்கரவாத முகாம்களில் 9 பயங்கரவாத உள்கட்டமைப்புகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது நார்வே, குரோஷியா, நெதர்லாந்து ஆகிய 3 நாடுகளின் பயணத்தை ரத்து செய்துள்ளார்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான அதிகரித்த பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்த மாத இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த நார்வே, குரோஷியா மற்றும் நெதர்லாந்து ஆகிய மூன்று நாடுகளின் பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்துள்ளதாக செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. தெரிவித்துள்ளது.

Update: 2025-05-07 06:56 GMT

Linked news