மல்லிகார்ஜுன கார்கே வாக்களித்தார்
கர்நாடகா மாநிலம் கலாபுர்கியில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாக்களித்தார். கலாபுர்கி தொகுதியில் ராதாகிருஷ்ணா காங்கிரஸ் வேட்பாளராகவும், உமேஷ் ஜி ஜதாவ் பா.ஜ.க. சார்பிலும் போட்டியிடுகின்றனர்.
முன்னதாக மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தள பதிவில்,
மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், “அரசியலமைப்பைக் காப்பாற்றவும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும்” மக்கள் தங்கள் வாக்குரிமையை பதிவு செய்ய வேண்டும் என்று அதில் பதிவிட்டுள்ளார்.
Update: 2024-05-07 05:53 GMT