நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு

நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

Update: 2024-05-07 01:49 GMT

காந்திநகர்,


Live Updates
2024-05-07 15:34 GMT

மேற்கு வங்கம் 73.93%, மத்திய பிரதேசம் 63.09%, உத்திர பிரதேசம் 57.34%, கோவா 72.27%, சட்டீஸ்கர் 66.99%

அசாம் 75.26%, பிகார் 56.55%, குஜராத் 56.76%, கர்நாடகா 67.76%, மகாராஷ்டிரா 54.77% வாக்குகள் பதிவாகியுள்ளன

2024-05-07 12:40 GMT

3-ஆம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. 6 மணிக்குள் வாக்குச்சாவடி வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

2024-05-07 12:21 GMT

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள வாக்குச்சாவடியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா வாக்களித்தார்.

2024-05-07 10:41 GMT

நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாநில வாரியாக 3 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்:

மாலை 3 மணி நிலவரப்படி ஓட்டுப்பதிவு

அசாம் - 63.08%

பீகார் - 46.69%

சத்தீஸ்கார் - 58.19%

கோவா - 61.3%

குஜராத் - 47.03%

கர்நாடகா - 54.20%

மத்திய பிரதேசம் - 54.09%

மராட்டியம் - 42.63%

உத்தர பிரதேசம் - 46.70%

தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ- 52.40%

மேற்குவங்காளம் - 63.11%

2024-05-07 08:40 GMT

நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மதியம் 1 மணி நிலவரப்படி 39.92 சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

மாநில வாரியாக 1 மணிவரையிலான வாக்குப்பதிவு நிலவரம்:

அசாம் - 45.88%

பீகார் - 36.69%

சத்தீஷ்கார் - 46.14%

தத்ரா-ஹவேலி-டையூ-டாமன் - 39.94%

கோவா - 49.04%

குஜராத் - 37.83%

கர்நாடகா - 41.59%

மத்தியபிரதேசம் - 44.67%

மராட்டியம் - 31.55%

உத்தரபிரதேசம் - 38.12%

மேற்குவங்காளம் - 49.27%

2024-05-07 06:41 GMT

நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 25.41 சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

மாநில வாரியாக 11 மணிவரையிலான வாக்குப்பதிவு நிலவரம்:

அசாம் - 27.34%

பீகார் - 24.41%

சத்தீஷ்கார் - 29.90%

தத்ரா-ஹவேலி-டையூ-டாமன் - 24.69%

கோவா - 30.94%

குஜராத் - 24.35%

கர்நாடகா - 24.48%

மத்தியபிரதேசம் - 30.12%

மராட்டியம் - 18.18%

உத்தரபிரதேசம் - 26.12%

மேற்குவங்காளம் - 32.82%

2024-05-07 06:25 GMT

மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித்ஷா அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அமித்ஷாவின் மனைவி சோனல்ஷா, மகன் ஜெய்ஷா, மருமகள் ரிஷிதா பட்டேலும் அதே வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். 

2024-05-07 05:53 GMT

கர்நாடகா மாநிலம் கலாபுர்கியில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாக்களித்தார். கலாபுர்கி தொகுதியில் ராதாகிருஷ்ணா காங்கிரஸ் வேட்பாளராகவும், உமேஷ் ஜி ஜதாவ் பா.ஜ.க. சார்பிலும் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தள பதிவில்,

மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், “அரசியலமைப்பைக் காப்பாற்றவும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும்” மக்கள் தங்கள் வாக்குரிமையை பதிவு செய்ய வேண்டும் என்று அதில் பதிவிட்டுள்ளார்.

2024-05-07 05:50 GMT

நடிகை ஜெனிலியா வாக்களித்தார்

நடிகை ஜெனிலியா தனது கணவரும் நடிகருமான ரிதிஷ் தேஷ்முக் மற்றும் மாமியார் வைஷாலியுடன் மராட்டியத்தில் லதூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

2024-05-07 04:56 GMT

மாநில வாரியாக 9 மணிவரையிலான வாக்குப்பதிவு நிலவரம்:

அசாம் - 10.12%

பீகார் - 10.03%

சத்தீஷ்கார் - 13.24%

தத்ரா-ஹவேலி-டையூ-டாமன் - 10.13%

கோவா - 12.35%

குஜராத் - 9.87%

கர்நாடகா - 9.45%

மத்தியபிரதேசம் - 14.22%

மராட்டியம் - 6.64%

உத்தரபிரதேசம் - 11.63%

மேற்குவங்காளம் - 14.60%

Tags:    

மேலும் செய்திகள்