பிரதமர் மோடியின் இரவு விருந்தில் இடம் பெற்ற... ... உலக அமைதிக்காக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்ற உறுதி - வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடியின் இரவு விருந்தில் இடம் பெற்ற பைடனின் விருப்ப உணவு

வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், முதல் பெண்மணி ஜில் பைடன் இருவரும் பிரதமர் மோடியை சிறப்பான முறையில் வரவேற்று அவருக்கு வெள்ளை மாளிகையில் இரவு விருந்து அளித்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

அவர், நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து விமானம் மூலம் வாஷிங்டன் புறப்பட்டு சென்றார். அவரை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், முதல் பெண்மணி ஜில் பைடன் இருவரும் சிறப்பான முறையில் வரவேற்று அவருக்கு வெள்ளை மாளிகையில் இரவு விருந்து அளித்தனர்.

பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட இந்த விருந்தில் அமெரிக்க ஜனாதிபதி பைடனின் விருப்ப உணவுகளான பாஸ்தா மற்றும் ஐஸ் கிரீம் ஆகியவை இடம் பெற்று இருந்தன.

இந்த விருந்து நிகழ்ச்சியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Update: 2023-06-22 04:03 GMT

Linked news