அன்புமணி அழைப்பு விடுத்த பொதுக்குழுவுக்கு எதிராக... ... அன்புமணி - ராமதாஸ் தரப்பிடம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நடத்திய விசாரணை நிறைவு

அன்புமணி அழைப்பு விடுத்த பொதுக்குழுவுக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை விசாரித்தார். அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரிடம் தனியாக பேச வேண்டி உள்ளதால், இருவரையும் தன்னுடைய அறைக்கு நேரில் வர கூற முடியுமா என இரு தரப்பு வழக்கறிஞரிடமும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அன்புமணி தரப்பு வழக்கறிஞர் இதை ஏற்றுக் கொண்டார். ராமதாஸ் தரப்பில் காணொலி வாயிலக ஆஜராக அனுமதி கேட்கப்பட்டது. இதை நீதிபதி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, அன்புமணி ராமதாஸ் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதேபோல ராமதாஸ் காணொலி வாயிலாக ஆஜராகியிருந்தார். இருவரிடமும் விசாரணை முடிந்த நிலையில், சற்று நேரத்தில் பொதுக்குழு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிகிறது.

Update: 2025-08-08 13:02 GMT

Linked news