பிரசாரத்தை தொடக்கிய விஜய்தமிழக சட்டசபை தேர்தல்... ... பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - தவெக தலைவர் விஜய்

பிரசாரத்தை தொடக்கிய விஜய்

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கி விட்டன. அதன்படி, திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தவெக, நாம் தமிழர், பாமக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை தொடங்கி விட்டன.

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று தொடங்கியுள்ளார். அவர் டிசம்பர் மாதம் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார். விஜய் பிரசாரத்திற்காக நவீன பஸ்சை பயன்படுத்தியுள்ளார்.

அதன்படி சென்னையில் இருந்து விமானம் மூலம் விஜய் இன்று திருச்சிக்கு வந்தார். விமான நிலையத்தில் இருந்து அவர் பிரசார வாகனத்தில் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை முன் பிரசார உரையை தொடங்குகிறார். காலை 10.30 மணிக்கு மரக்கடை பகுதிக்கு விஜய் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்கள் கூட்டம் காரணமாக பயணம் 4 மணிநேரம் தாமதமானது. இதையடுத்து, மதியம் 2.30 மணி அளவில் மரக்கடை பகுதியை வந்தடைந்தார். அவர் சற்று நேரத்தில் மக்களிடையே உரையாற்றுகிறார்.   

Update: 2025-09-13 09:08 GMT

Linked news