பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - தவெக தலைவர் விஜய்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.;
அரியலூரை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை - விஜய்
தமிழகத்தில் வறட்சியான மாவட்டங்களில் அரியலூர் மாவட்டமும் ஒன்று. அரியலூர் மாவட்டத்தை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை முறையாக பராமரிக்க வேண்டும். போக்குவரத்துத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் போதிய பேருந்துகள் இல்லை.
திமுக அரசு ஏமாற்றுகிறது - விஜய்
அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதாக திமுக அரசு ஏமாற்றுகிறது. பெரும்பாலான வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. கதை விடாதீர்கள் மை டியர் சி.எம்.சார்.
உங்களுக்காக உழைப்பதுதான் என் எண்ணம் - விஜய்
அரசியலுக்கு வந்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இல்லை. என்ன பெரிய பணம்? வேணுங்கிற அளவுக்கு பார்த்தாச்சு. மக்களின் அன்புக்காக எவ்வளவு பெரிய வருமானத்தையும் தூக்கி எறியலாம். பணம் பெரிது அல்ல; உங்களுக்காக உழைப்பதுதான் என் எண்ணம்
அரியலூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை
அரியலூரில் அண்ணா சிலை அருகே திரண்டுள்ள தொண்டர்கள் மத்தியில் தவெக தலைவர் விஜய் பரப்புரையாற்றி வருகிறார்.
அரியலூரில் தவெக தலைவர் விஜய்
திருச்சி பரப்புரையை நிறைவு செய்த தவெக தலைவர் விஜய் அரியலூர் சென்றடைந்தார்
திருச்சி பரப்புரையில் தவெக தலைவர் விஜய் - புகைப்பட தொகுப்பு
திருச்சி பரப்புரையில் தவெக தலைவர் விஜய் - புகைப்பட தொகுப்பு
பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - தவெக தலைவர் விஜய்
கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை தவெக செய்துகொண்டுக்கும். பெண்கள் பாதுகாப்பிலும், சட்ட பிரச்சினைகளிலும் சமரசம் கிடையாது. நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம். வெற்றி நிச்சயம், மீண்டும் சந்திக்கும்வரை நன்றி வணக்கம் என்று கூறி தவெக தலைவர் தனது உரையை நிறைவு செய்தார்.
திமுகவை சேர்ந்தவருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது. பஸ்களில் பெண்களை இலவசமாக அனுமதித்துவிட்டு ஓசி, ஓசி என சொல்லிக்காடுகிறார்கள். எல்லோருக்கும் ரூ. 1,000 தருவதில்லை, கொடுத்த சிலருக்கும் சொல்லிக்காட்டுகிறார்கள் என்று விஜய் கூறினார்.
திமுகவினரிடமிருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை - தவெக தலைவர் விஜய்
டீசல் விலை ரூ. 3 குறைப்பு, மாணவர்கள் கல்விக்கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம், அரசுப்பணியில் 2 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என திமுக கூறியது செய்ததா? இப்படியே நாம் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். திமுகவினரிடமிருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை என்று விஜய் கூறினார்.
எத்தனை வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றியுள்ளது? - விஜய் கேள்வி
கடந்த சட்டசபை தேர்தலில் 505 வாக்குறுதிகளை கொடுத்த திமுக அதில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது? என்று திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை படித்துக்காண்பித்து விஜய் கேள்வி எழுப்பினார்.