‘வெனிசுலா அதிபரும், அவரது மனைவியும் நாடு... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 03.01.2026
‘வெனிசுலா அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டனர்’ - டிரம்ப் அதிரடி அறிவிப்பு
வெனிசுலா நாட்டின் அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வெனிசுலா மீது அமெரிக்கா வெற்றிகரமான தாக்குதலை நடத்தியுள்ளது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Update: 2026-01-03 10:07 GMT