இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 03.01.2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2026-01-03 09:00 IST


Live Updates
2026-01-03 04:46 GMT

புதுச்சேரியில் புத்தாண்டை ஒட்டி ரூ.47 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

புதுச்சேரியில் கடந்த 3 நாட்களில் ரூ.47 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. புத்தாண்டை ஒட்டி பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு ரக மதுபானங்களை விரும்பி வாங்கியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026-01-03 04:20 GMT

 ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ட்ராவல்ஸ் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருக்கும் போது, முன்னால் சென்ற லாரியை முந்துகையில் லேசாக உரசவே, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது

2026-01-03 03:44 GMT

ஜல்லிக்கட்டு வீரர்கள் வாக்குவாதம்

புதுக்கோட்டை: தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தில் வாக்குவாதம் வீரர்களை வரிசையில் அனுப்புவதில் குழப்பம் மற்றும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து மாடுபிடி வீரர்கள் வாக்குவாதம்; வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீரர்கள் வாடிவாசலுக்கு செல்லும் பகுதியில் இருந்து வெளியேற்றம்

2026-01-03 03:36 GMT

 “ஆசிரியர்களை கைவிட மாட்டோம்”-அன்பில் மகேஸ்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை கைவிட மாட்டோம்; தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவே ஆசிரியர்கள் போராடுகிறார்கள் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

2026-01-03 03:32 GMT

தென்மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தாம்பரம்-நாகர்கோவில் (ஜன. 12, 19 -2 Trips), செங்கல்பட்டு-தென்காசி (2.09, 16 - 2 Trips), - (2.12, 19-2 Trips), சென்னை - போத்தனூர் (ஜன.14, 21-2 Trips), சென்னை - தென்காசி (ஜன.09 - 1 Trip), சென்னை - மங்களூரு (ஜன.14 -1 Trip), போத்தனூர் - செங்கொட்டை (ஜன.13 - 1 Trip), தாம்பரம் - ராமேஸ்வரம் (ஜன.14,21 - Trips). அனைத்து ரயில்களும் மறுமார்க்கமும் புறப்படும்

Tags:    

மேலும் செய்திகள்