தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு இன்று மாலை... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 03.01.2026

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு

இன்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதன்படி ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை ரூ.60 குறைந்த நிலையில், மாலை ரூ.80 உயர்ந்து, ரூ.12,600-க்கு விற்பனையாகிறது. தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.640 உயர்ந்து, ரூ.1,00,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ரூ.257-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 உயர்ந்து, ரூ.2,57,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

Update: 2026-01-03 12:34 GMT

Linked news