மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக நீர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 24-10-2025
மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக நீர் திறப்பு
சேலத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, அணையின் 16 கண் மதகு வழியே திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 55,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
Update: 2025-10-24 03:54 GMT