வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 01.01.2026
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. கடந்த 2 மாதங்களாக விலை குறைந்த நிலையில் இந்த மாதம் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.110 உயர்ந்து, ரூ.1,849.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.868.50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.
Update: 2026-01-01 04:13 GMT