"விஜய் இவர்களை சமாளித்தாலே அரசியலில்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 01.01.2026

"விஜய் இவர்களை சமாளித்தாலே அரசியலில் ஜெயிச்சிடுவாரு"- எச்.வினோத் கருத்து

விஜய்யின் அரசியல் வருகை குறித்து இயக்குநர் எச்.வினோத் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது. "முட்டாள்கள் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு எது நல்லது. எது கெட்டது என தெரியாதவர்கள். அறிவாளிகளுக்கு நல்லது, கெட்டது தெரியும்.

அறிவாளி அயோக்கியர்கள், எது நல்லது என்பதை வெளியில் சொல்லாமல் அதை தன்னுடைய சுயநலத்துக்காக மட்டுமே பயன்படுத்துவார்கள். முட்டாள் அயோக்கியர்கள், அறிவாளி அயோக்கியர்களின் அடியாள் போல மோசமான விஷயங்களை செய்வார்கள். இந்த 4 வகை மனிதர்களை சமாளித்தாலே போதும், விஜய் அரசியலில் ஜெயிச்சிடுவார்னு நம்புறேன்.." என எச்.வினோத் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2026-01-01 05:06 GMT

Linked news