திமுக ஆட்சியில் ரூ.2.20 லட்சம் கோடி மாயம்:... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 01.01.2026
திமுக ஆட்சியில் ரூ.2.20 லட்சம் கோடி மாயம்: அன்புமணி குற்றச்சாட்டு
திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளில் வாங்கிக் குவித்த கடன்களின் விளைவாக நடப்பாண்டில் வட்டியாக மட்டும் ரூ.70,754 கோடி செலுத்த வேண்டியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் திமுக செலுத்திய வட்டியை மட்டும் வைத்துக் கொண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2 லட்சம் வழங்க முடியும். ஆனால், ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ.6 லட்சம் கடனை திமுக அரசு வாங்கி வைத்திருக்கிறது. மோசமான நிதி நிர்வாகத்தால் தங்களை அடகு வைத்திருக்கும் திமுகவுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
Update: 2026-01-01 05:13 GMT