தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர் சங்கங்களின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-03-2025
தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்துவது, கால் டாக்சி செயலிகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்தப்படும்.
இதன்படி சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 1.5 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது என தெரிவித்து உள்ளது. எனினும், மருத்துவமனை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் ஆட்டோ இயங்கும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கலெக்டர் அலுவலகம், ராஜரத்தினம் ஸ்டேடியம், அண்ணா சாலை தாராப்பூர் டவர் போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில், அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களும் பங்கேற்கின்றன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Update: 2025-03-19 04:06 GMT