இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-03-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
இத்தாலி: அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து; 6 பேர் பலி
இத்தாலியில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
டெல்லியில், நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தி.மு.க. எம்.பி.க்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது இடங்களில் வைக்கப்பட்டு உள்ள தி.மு.க. கொடிகளை அகற்றும்படி கட்சியின் பொது செயலாளர் துரைமுருகன் உத்தரவு பிறப்பித்து உள்ளார். சென்னை ஐகோர்ட்டு மதுரை அமர்வின் உத்தரவுக்கு ஏற்ப அனைத்து கட்சி கொடி கம்பங்களை அகற்றி அதுபற்றிய விவரங்களை கட்சி தலைமைக்கு அனுப்பும்படியும் அவர் கேட்டு கொண்டார்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பந்திப்போரா-ஸ்ரீநகர் சாலையில் சந்தேகத்திற்குரிய வகையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர்.
2025-2026-ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதன்படி, ரூ.5,145 கோடியில் சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்துள்ளார்.
தமிழக சட்டசபையில் பேசி வரும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பியதற்காக தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.
விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் பெற்ற நிபுணத்துவம் மற்றும் சிறந்த அனுபவங்களை பயன்படுத்தி கொள்ள இந்தியா விரும்புகிறது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்து உள்ளார்.