துணை ஜனாதிபதி வருகை: ராமேஸ்வரத்தில் டிரோன்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 29-12-2025

துணை ஜனாதிபதி வருகை: ராமேஸ்வரத்தில் டிரோன்கள் பறக்க தடை

காசி தமிழ் சங்கம் 4.0 நிறைவு விழா நாளை ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆலயம் விடுதி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். 

இந்த நிலையில், துணை ஜனாதிபதி வருகையையொட்டி பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மற்றும் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் பறக்க விடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து டிரோன்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

Update: 2025-12-29 05:22 GMT

Linked news