ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகளுக்கான தடை நீடிப்பு
தற்போதைய நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக மேலும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், தீவிர பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்று பகுதியில் குளிக்கவும் பரிசல் சவாரி மேற்கொள்ளவும் விதிக்கப்பட்ட தடை 11-வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-07-05 03:39 GMT