இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடம் கற்பிக்கும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடம் கற்பிக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவு விவரம்:-
2வது டெஸ்ட்
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: 2வது இன்னிங்சில் 4ம் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்ப்பு. இங்கிலாந்தை விட 357 ரன்கள் முன்னிலையில் இந்தியா உள்ளது.
ராமதாஸ் தலைமையில் 8ம் தேதி பாமக செயற்குழு கூட்டம்
பாமக செயற்க்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் அருகே ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராமதாஸ் தலைமையில் 8ம் தேதி பாமக செயற்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயண பரப்புரையில் பங்கேற்க அமமுகவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
மாலை 4 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, தேனி, தென்காசி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் மாலை 4 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று (ஜூலை 05) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
"விஜய்யை Left Handல் முதல்-அமைச்சர் டீல் செய்வார்" - அமைச்சர் சேகர்பாபு
பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக தலைமைச்செயலகம் வருவேன் என்று த.வெ.க தலைவர் விஜய் கூறி இருந்தார்.
இந்நிலையில், “விஜய் போன்றோர் அறையில் இருந்து அறைகூவல் விடுவதை எங்கள் முதல்-அமைச்சர் Left Handல் டீல் செய்வார். மடப்புரம் இளைஞர் மரணம் தொடர்பாக முதல்-அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுத்தார்” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.