பஞ்சாப், இமாசல பிரதேசத்தில் கடும் வெள்ள பாதிப்பு;... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-09-2025
பஞ்சாப், இமாசல பிரதேசத்தில் கடும் வெள்ள பாதிப்பு; பிரதமர் மோடி நாளை ஆய்வு
வடமாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பரவலாக பருவமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், பஞ்சாப்பில் ஓட கூடிய சட்லெஜ், பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்நிலையில், பஞ்சாப்பில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி நாளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார். இதனை பஞ்சாப் பா.ஜ.க. தலைவர் சுனில் ஜாக்கர் தெரிவித்துள்ளார்.
Update: 2025-09-08 04:08 GMT