இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-09-08 08:58 IST


Live Updates
2025-09-08 13:54 GMT

காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷ், காவல்துறை வாகனத்திலேயே கிளைச்சிறைக்கு வருகை தந்தார்

2025-09-08 13:52 GMT

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய, வழிபாட்டு உரிமை தொடர்பான வழக்குகளில் 3வது நீதிபதி நடத்திய விசாரணை நிறைவு பெற்றாது. இதனையடுத்து தீர்ப்பு தேதியை குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு.

2025-09-08 13:23 GMT

தவெக பொதுச்செயலர் என்.ஆனந்த் மீது திருச்சி ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருச்சி விமான நிலையம் எதிரே உள்ள பிள்ளையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தபோது, போக்குவரத்துக்கு இடையூறாக வாகனம் நிறுத்தி, போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக என்.ஆனந்த் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.

2025-09-08 13:08 GMT

வாலாஜாபாத் அருகே பேக்கரியில் நடந்த அடிதடி வழக்கு தொடர்பாக முருகன் என்பவர் புகார் அளித்திருந்தார். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் டிஎஸ்பி சங்கர் கணேஷை எஸ்.சி. எஸ்.டி சட்டப்படி கைது செய்ய நீதிபதி செம்மல் உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சீருடையுடன்  கைது செய்யப்பட்டார் டிஎஸ்பி சங்கர் கணேஷ். இந்தநிலையில் சக காவலர்கள் உதவியுடன் டிஎஸ்பி சங்கர் கணேஷ் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

2025-09-08 13:04 GMT

வாலாஜாபாத் அருகே பேக்கரியில் நடந்த அடிதடி வழக்கு தொடர்பாக முருகன் என்பவர் புகார் அளித்திருந்தார். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் டிஎஸ்பி சங்கர் கணேஷை எஸ்.சி. எஸ்.டி சட்டப்படி கைது செய்ய நீதிபதி செம்மல் உத்தரவிட்டார். 22-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி செம்மல் உத்தரவிட்டதை அடுத்து டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது செய்யப்பட்டார். ஒரு மாதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற வழக்கில் காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் சீருடையுடன் டிஎஸ்பி கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

2025-09-08 12:41 GMT

ராமநாதபுரம் கமுதி அருகே மின்னல் தாக்கியதில் தினகரன் [45] என்ற விவசாயி உயிரிழந்தார்.

2025-09-08 12:40 GMT

டிஜிபி அலுவலகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு வருபவர்கள் தங்கள் விபரங்கள் தெளிவாக தெரியும்படி அடையாள அட்டை அணிய வேண்டும் என்பன உள்பட 13 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

2025-09-08 12:37 GMT

அவதூறு வழக்கில் தெலுங்கானா முதல்-மந்திரியை விடுவிப்பதற்கு எதிராக அம்மாநில பாஜக நிர்வாகி தாக்கல் செய்த மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சண்டைக்கு சுப்ரீம் கோர்ட்டை பயன்படுத்த கூடாது என்றும் வழக்கு தொடர்ந்த பாஜ நிர்வாகி வெங்கடேஸ்வரலுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு.

2025-09-08 12:29 GMT

அமெரிக்கா விதித்த அதிக வரி காரணமாக 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடை ஏற்றுமதி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் மூன்று வாரங்களில் தீர்வு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.

2025-09-08 12:27 GMT

கள்ளக்குறிச்சி அருகே ஜம்பை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்